இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் மாநில அளவிலான தனித் திறன் மாநாடு மற்றும் கருத்தரங்கம், சென்னை கிண்டியில் உள்ள முன்மாதிரி பயிற்சி மைய வளாகத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9,10) ஆகிய நாள்களில் நடைபெற இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சீனிவாசன் தெரிவித்தார்.
இளைஞர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், வரும் 9,10ஆகிய நாள்களில் சென்னை கிண்டி மாதிரி தொழிற் பயிற்சி மையத்தில் மாநில திறன் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் மாவட்டந்தோறும் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் திறன் படைப்புகள் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்படும். இதில், சிறந்த தனித் திறன் படைப்புக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும், தமிழகத்தின் திறன் பயிற்சி, திறன் சூழல், திறன் முனைப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து சர்வதேச அளவிலான கருத்தரங்கமும் நடத்தப்படும்.
இதைத் தொடர்ந்து, வரும் 11, 12 ஆகிய நாள்களில் அம்பத்தூர், கிண்டி ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தனித்திறன் தேடுதல் போட்டிகளும் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் 1.1.1997 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருப்பது அவசியம்.
இந்த தனித் திறன் தேடலில் தேர்வு செய்யப்படுவோர் ஜுன் 21, 23-ஆகிய நாள்களில் பெங்களுரில் நடைபெறும் மண்டல அளவிலான திறன் போட்டியிலும், ஜுலை 20 -இல் புதுதில்லியிலும் நடைபெறும் தேசிய அளவிலான திறன் போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மாநாட்டில் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







