பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ரயில் பயணிகளுக்கு இடையூறு:  டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு அலுவலகம் அருகே பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை

Updated On :8 ஜூன் 2018, 12:35 am IST

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு அலுவலகம் அருகே பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி ரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். 
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு தென்னக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
நிகழ்வில், கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகி தனுஷ்கோடி மற்றும் கும்மிடிப்பூண்டி விவேகானந்தர் நற்பணி இயக்கத்தினரும் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சைலேந்திர பாபுவிடம் வழங்கினர்.
அப்போது, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலும், ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பயணசீட்டு அலுவலகப் பகுதியிலும் சங்கிலி பறிப்பு, பிக்பாக்கெட் உள்ளிட்டவை தொடர்ந்து நடப்பதால் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணச்சீட்டு மையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இரவில் உறங்குவதால் சமூக விரோத செயல்கள் நடைபெற வழி ஏற்படுவதாகவும், இதனால் இரவு நேரத்தில் பயண சீட்டு மையத்தில் யாரும் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், பயணச் சீட்டு அலுவலகத்தை ஒட்டி டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளதால், போதையில் வரும் நபர்களால் ரயில் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் ஏடிஜிபியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
தொடர்ந்து, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், ரயில் நிலையத்திலும், ரயில் பயணத்திலும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ஏடிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.