மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வென்ற சிறுவர்கள்

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு சுங்கத் துறையின் கால்பந்து பயிற்சியாளர் கிராண்ட் துரைப்பாண்டியன் பரிசுக் கோப்பையை வழங்கினார்.

Updated On :21 மே 2018, 7:12 pm

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு சுங்கத் துறையின் கால்பந்து பயிற்சியாளர் கிராண்ட் துரைப்பாண்டியன் பரிசுக் கோப்பையை வழங்கினார்.
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் பகுதியில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி, கடந்த 18-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 36க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
போட்டியில் 10, 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பிரிவுகளாகப் பங்கேற்றனர். 10 வயதுக்குட்பட்ட கால்பந்து பிரிவில் நெய்வேலி முதல் இடத்தையும், புழல் 2-ஆம் இடத்தையும், 12 வயதுக்குட்பட்ட கால்பந்து பிரிவில் புழல் முதல் இடத்தையும், வில்லிவாக்கம் 2-ஆம் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட கால்பந்து பிரிவில் வில்லிவாக்கம் முதல் இடத்தையும், புழல் 2-ஆம் இடத்தையும் பிடித்தன.
இந்தப் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுங்கத் துறையின் கால்பந்து பயிற்சியாளர் கிராண்ட் துரைப்பாண்டியன் பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினர்.
நிகழ்வில், விளையாட்டுத் திடலில் கூடுதலாக மின்விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவையான பணிகளையும் செய்து தருவதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், மாவட்டச் செயலாளரும், அம்பத்தூர் அதிமுக எம்எல்ஏவுமான அலெக்ஸாண்டர் ஆகியோர் உறுதியளித்தனர். மேலும், விளையாட்டுத் திடல் சீரமைப்பு பணிக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி செய்து தரப்படும் என்று திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் தெரிவித்தார். இதேபோல், கால்பந்தாட்ட வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் அளிக்கத் தயார் என திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் து.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய நிர்வாகிகள் தேன்தமிழ், கார்த்திக், ஜி.கே.கரேகா, மெட்ரோ ராஜன், யோகராஜ், ஆடலரசன், கலைராஜன், இளங்கோ, ஜெகன், மாரிமுத்து, ஊட்டி சிவா, ரமேஷ், வசந்த், பார்த்திபன், சிவா, மதன், சுந்தர், நரேன், ரமேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். புழல் கால் பந்து பயிற்சி மையச் செயலாளர்
எஸ்.விஜயன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.