செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

திருத்தணியில் இருந்து தீபாவளிக்கு 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருத்தணி பணிமனையில் இருந்து தீபாவளிக்கு 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Updated On :5 நவம்பர் 2018, 8:07 am IST

திருத்தணி பணிமனையில் இருந்து தீபாவளிக்கு 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 நாடு முழுவதும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாட ப்படுகிறது. 
தமிழக அரசு தீபாவளிக்கு முதல் நாள் திங்கள்கிழமையும் பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை வருவதால், வெளியூர் பயணிகள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாட வசதியாக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 
 அந்த வகையில், திருத்தணி போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சனிக்கிழமை மாலை முதல், நவம்பர் 11-ஆம் தேதி வரையில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 
இது குறித்து திருத்தணி போக்குவரத்துக் பணிமனை அலுவலர் ஒருவர் கூறும்போது, தீபாவளிப் பண்டிகைக்கு, அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் வசதிக்காக,  திருத்தணி பணிமனையில் இருந்து, திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட தென்பகுதிகளுக்குச் செல்வதற்கு வசதியாக 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. இவை சனிக்கிழமை முதல் தொடங்கி, நவம்பர் 11-ஆம் தேதி வரையில் இயக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.