திருவள்ளூர் அருகே சப்தகிரி விரைவு ரயிலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுவழியில் ரயில் ஒரு மணிநேரம் நின்றததால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் போது செஞ்சிபானம்பாக்கம்-மணவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயில் ஓட்டுநரிடம் விவரம் கேட்டனர்.
அப்போது இயந்திரக்கோளாறு என அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணத்திலிருந்து ரயில்வே அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஓட்டுநர் இயந்திரக் கோளாறை சரி செய்தவுடன் சரியாக 8.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் ஒரு மணிநேரம் வரையில் அவதிக்குள்ளாகினர். மேலும், இந்த ரயில் நடுவழியில் நின்றதால், அதற்கு பின்னால் வந்த விரைவு ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் செல்ல முடியாமல் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








