அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

முதல்வர், துணை முதல்வர் பற்றி அவதூறு பரப்பியவர் கைது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) விமர்சித்து பதிவு செய்து

Updated On :9 அக்டோபர் 2018, 4:19 am IST


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) விமர்சித்து பதிவு செய்து அனுப்பியவரை மப்பேடு போலீஸார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது:
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியப் பொறுப்பாளராக இருந்து வருபவர் ரமேஷ். அவருக்கு ஒரு நபர் கட்செவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி அப்பதிவை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக உடனே ரமேஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மப்பேடு போலீஸார் விசாரணை நடத்தினர். 
அதோடு, இணையதளக் குற்றத்தடுப்பு (சைபர் கிரைம்) போலீஸாரின் உதவியுடன் அவதூறு பரப்பியவர் யார் என்று ஆய்வு செய்தனர். அப்போது, கொருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ரமேஷ் என்பவரே இந்தச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்தது. அவரை மப்பேடு போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.