சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

அமைச்சர் செங்கோட்டையன், ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம். உடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.

Published On :26 மே 2026, 11:57 am IST

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இரண்டாக உடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.

அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தனியே பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் நேற்று (மே 25) சந்தித்துப் பேசியிருந்தனர்.

எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, அவர்களது ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளும் காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அரசிதழ் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்று, ராஜிநாமா செய்ததால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. 3 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Summary

Represented by AIADMK MLAs madurantakam, dharapuram, perundurai Constituencies are resigned declared vacant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.