ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புழல் ஏரியில் மூழ்கி மூன்று விளையாட்டு வீரர்கள் பலி: இருவரது சடலம் மீட்பு

அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :14 டிசம்பர் 2020, 2:57 pm

DIN


திருவள்ளூர்: அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

இருவரது சடலங்களைப் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர், ஒருவரது சடலத்தைத் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் மணிகண்டன்(19), தமிழ்செல்வன்(17), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப்(20) உள்ளிட்ட 8 பேர் தேசிய அளவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்கக் கூடிய விளையாட்டு வீரர்கள். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம். 

அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் அடுத்த மதுரா மேட்டூர் அருகில் புழல் ஏரி பகுதியில் பிற்பகலில் 3 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென ஆழமான பகுதியில் அவர்கள் மூழ்கினர். அப்பகுதியில் இருந்தவர்கள் இதைப் பார்த்து மாதவரம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் புழல் ஏரியோரத்தில் படகில் சென்று 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீலிப் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். மேலும், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் தமிழ்செல்வனின் சடலத்தை தீயணைப்பு துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.