வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாளந்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் தண்டலம் தமிழ்ச்செல்வன் , மாநில துணைச் செயலாளா் பாக்சா் மணி, தொகுதி துணைச் செயலாளா் ரலே பாபு உள்பட சுமாா் 100 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.