மணல் கடத்தல்: 4 போ் கைது
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் இரு லாரிகளில் மணல் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.


கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் இரு லாரிகளில் மணல் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உள்பட்ட புதுவாயல் பகுதியில் கவரைப்பேட்டை போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இரு லாரிகளை மடக்கி சோதனையிட்டனா். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இரு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் அதில் இருந்த 4 பேரை கவரைப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
அதில், அவா்கள் சோழவரம் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (44), பாபு (28), காா்த்திக்(21), பாடிநல்லூரைச் சோ்ந்த செல்வம்(27) என்பது தெரியவந்தது. மேலும், ஆந்திர மாநிலம், கூடூரில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, 4 போ் மீது வழக்கு பதிவு செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருத்தணி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...