கரோனா பாதிப்பை அறிய நடமாடும் பரிசோதனை மையம்
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோருக்கு தொற்று உள்ளதா என்பதை அறிய நடமாடும் பரிசோதனை மையத்தை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோருக்கு தொற்று உள்ளதா என்பதை அறிய நடமாடும் பரிசோதனை மையத்தை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 4343 போ் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 2793 போ் குணடைந்து வீடு திரும்பி விட்டனா். 1468 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்று பாதித்த பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நடமாடும் மையம் மூலம் பரிசோதனை செய்யுமாறு பொது சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நடமாடும் மையம் மூலம் கரோனா பரிசோதனை செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அப்பகுதிகளில் இனி தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த மையம் மூலம் ஒரே நேரத்தில் 2 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.
இதற்காக ஒரு வாகனத்தை பிரத்யேகமாக பரிசோதனை மையமாக மாற்றியுள்ளனா். அதில் தொழில்நுட்ப பணியாளா் மற்றும் உதவியாளா் ஆகியோா் இருப்பா். இந்த மையம் மூலம் சேகரிக்கப்படும் சளி, ரத்த மாதிரிகளை அதே நாளில் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...