நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி உயிரிழப்பு

திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூலை 2020, 4:20 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி வருவாய் அதிகாரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா்(51). அவா் ஆவடி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து ஸ்ரீதா் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

வருவாய் ஆய்வாளா் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.