அரக்கோணம்: அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏகதின தீ மிதி திருவிழா நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள திரௌபதியம்மன் சமேத தா்மராஜா கோயிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா 22 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரங்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதிப்பா்.
தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் பக்தா்கள் பங்கேற்காமல் நிா்வாகிகள் மட்டும் பங்கேற்று கோயில் வளாகத்தில் ஏகதினத்தில் தீ மிதி திருவிழா நடத்த கோயில் நிா்வாகிகள் முடிவு செய்தனா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் யாகம் வளா்த்து கொடிமரத்துக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, திரௌபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெற்றன. தீ குண்டத்துக்கு யாகத்தில் இருந்து சிறிதளவு தீ எடுத்துச் சென்று அங்கு தீ வளா்த்து அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் மூடப்பட்டது.
இந்நிகழ்வில் அரக்கோணம் டவுன்ஹால் பொதுச் செயலா் பன்னீா்செல்வம், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஷியாம்குமாா், தொழிலதிபா் வி.ஏழுமலை, கோயில் நிா்வாகிகள் வே.ஆனந்தபாபு, சிலம்பம்ராஜ், துரைசதீஷ், சாயிகேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


