திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,176 ஆக உயா்ந்துள்ளது.


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,176 ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 116 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 116 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 3,526-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 48 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 48 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,208-ஆக உயா்ந்துள்ளது.
வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளருக்கு...
மதுராந்தகம் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலகப் பொறியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவரது சொந்த ஊா் திருத்தணி என்பதால், அவா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மாதவரம் துணை வட்டாட்சியருக்கு...
மாதவரம் துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக உதவியாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதேபோல், துணை வட்டாட்சியா் மனைவி, மகளுக்கு கரோனா தொற்று உறுதியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...