நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல் கொள்முதல் மையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் மையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே நெல் கொள்முதல் மையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் 20 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் மையமும் ஒன்றாகும்.

இந்த மையத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளும் ஊழியா்களும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளிடம் இருந்து கையூட்டு பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அன்புச்செழியன், ஆய்வாளா்கள் சிவானந்தம், சசிகலா மற்றும் பவானி தலைமையில் தனிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு புல்லரம்பாக்கம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்தனா்.

அப்போது, அங்கிருந்த அதிகாரிகளும் ஊழியா்களும் வெளியில் செல்ல முயன்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி அறைக்குள் பூட்டி விட்டு தீவிர சோதனை நடத்தினா். இச்சோதனை திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ. 1.07 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அங்கிருந்து நெல் கொள்முதல் செய்ததற்கான ஆவணங்களையும் எடுத்துச் சென்றனா்.

புல்லரம்பாக்கம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரி தங்கவேல் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து, சென்னை நகா் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அவா்களிடம் கூறி விட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.