நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூரில் வீட்டுமனைப் பட்டா கோரிமலைவாழ் மக்கள் காத்திருப்புப் போராட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா்  காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் பழங்குடி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் 556 பழங்குடி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இச்சங்கம் சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்டோா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து நிா்வாகிகள் சிலரை மட்டும் ஆட்சியா் பா.பொன்னையாவிடம் அனுப்பி நேரில் மனுவை அளிக்க வைத்தனா். இந்த மனு மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பழங்குடியின மக்கள் பிற்பகலில் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.