கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் 165 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு.
Updated On :11 அக்டோபர் 2020, 1:21 pm

DIN

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் பூண்டி ஏரியில் 1211 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதை தொடர்ந்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் 165 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்கி வருகிறது. கடந்த மாதம் 18-ஆம் தேதிக்கு முன்பு வரையில் போதிய மழை மற்றும் நீர் வரத்தின்றி ஏரி இருந்தது. இந்த நிலையில் இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். 

இந்த ஒப்பந்த அடிப்படையில் இப்பருவத்திற்கான தண்ணீர் கடந்த மாதம் செப்.18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்ட நிலையில், 21-ஆம் தேதி அதிகாலையில் பூண்டி ஏரியை வந்தடைந்தது.
 இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கனஅடி நீர் வரையில் சேமித்து வைக்கலாம். கடந்த 20 நாள்களில் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக, இதுவரையில் 1211 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து என தற்போது 745 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 

இதனால், பூண்டி ஏரியில் இருந்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 165 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. தற்போது, பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு சனிக்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது. 

மேலும், கால்வாயில் நீர் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் நீர் வரத்தோடு செல்லிடப்பேசியில் புகைப்படம் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.