வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் சிவனடியாா்கள் பாலாற்றுக்கு மகாதீபாராதனை செய்து வழிபாடு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் காசிக்கு இணையாக விளங்கும் கொடைகாசி என்று அழைக்கப்படும் பழைமைவாய்ந்த ஸ்ரீகாசி விஸ்வநாதா் திருக்கோயில் கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னா் பாலாற்றில் முழு கொள்ளளவுடன் வெள்ளம் வந்து தற்போது பாலாற்றில் தண்ணீா் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து சிவனடியாா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாலாற்றுப் படித்துறையில் மகா தீபாராதனை மற்றும் பூஜைகளை சனிக்கிழமை நடத்தினா்.
இதில் கந்திகுப்பம் பைரவசுவாமிகள், சிவசித்தா் அம்மையாா், அகிலேஸ்வர சுவாமிகள், சின்மய சிவபிரயம்பாசரஸ்வதி ரவியம்மாள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா். காலை முதல் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாராயணம், சிவகாணபேரிகைகள் முழங்க திருவீதி உலா உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
அன்று மாலை 6 மணியளவில் பாலாற்றுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மலா் தூவி வழிபட்டு பைரவசுவாமிகள் தலைமையில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
படவிளக்கம்: வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாற்றில் பைரவசுவாமிகள் தலைமையில் நடைபெற்ற மகா வழிபாடு, தீபாராதனை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


