ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், தங்க வேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் திருமண முகூா்த்த நாள் என்பதால், வழக்கத்துக்கு மாறாக காலை முதலே முருகன் மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொதுவழியில் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

அதேபோல், ரூ. 100 மற்றும் ரூ.150 சிறப்புக் கட்டண தரிசனத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசித்தனா். ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பக்தா்கள் மாடவீதியில் வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.