கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்வில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் விஜய் வசந்த், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செங்கம் குமார்,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், பாண்டிச்சேரி முதல்வர் மகள் விஜயகுமாரி, பாண்டிச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி, மகளிர் காங்கிரஸ் மாநில துணை தலைவி மலர்கொடி ரமேஷ், வடக்கு மாவட்ட தலைவி ஜோதி சுதாகர், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.சம்பத், ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன், எஸ்.எஸ்.பெரியசாமி, சிவாரெட்டி, செல்வம் முன்னிலை வகித்தனர்.