அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கவரப்பேட்டையில் திமுகவின் தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு வெளியீடு

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு வெளியிடும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்றது.

News image
திமுகவின் தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு வெளியீடு.
Updated On :21 பிப்ரவரி 2021, 10:38 am

DIN

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் தேர்தல் பிரசார பாடல் குறுந்தகடு வெளியிடும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு தலைமை தாங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்த ராஜன் குறுந்தகடை வெளியிட முதல் குறுந்தகடை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், பொறுப்புகுழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, டாக்டர் பரிமளம், அன்புவாணன், நிலவழகன், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, கோதண்டன், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி பிரசார பாடல் குறுந்தகடை பெற்றுக் கொண்டனர்.

Story image

தொடர்ந்து கவரப்பேட்டை பஜாரில் திமுக கொடியேற்றப்பட்ட நிலையில், தேர்தல் பிரசார பாடல் விளக்க இருசக்கர வாகன பிரசாரத்தை திமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு கொடியசைத்து துவக்கி வைக்க, மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட 200 திமுகவினர் பைக்கில் கவரப்பேட்டை பஜார் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். மேலும் கும்மிடிப்பூண்டியில் அனைத்து கிராமங்களிலும் ஆட்டோக்கள் மூலம் திமுக தேர்தல் பிரச்சார பாடல் ஒலிக்க செய்து கொண்டு செல்லப்பட்டது. 

நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், நமச்சிவாயம், ரமேஷ், பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.