சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

News image
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
Updated On :11 ஜனவரி 2021, 8:30 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டோருக்கு அரசு அடையாள அட்டை வழங்கக் கோரி, கடந்த ஓராண்டாக ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் ஆட்சியா் உறுதியளித்திருந்தாா். அதன்படி, மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆட்சியா் பா.பொன்னையாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்தாா்.

நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.