எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கும்மிடிப்பூண்டி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News image
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்.
Updated On :11 மார்ச் 2021, 1:22 pm

DIN

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதிமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கும்மிடிப்பூண்டி தொகுதி அறிவிக்கப்படாமல் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபாளையத்தில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Story image

தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வரும் தொகுதியை எதற்காக பாமகவிற்கு ஒதுக்கினார்கள் என ஆதங்கம் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி தொகுதியில் பல முறை பாமக போட்டியிட்டு ஒரு முறை கூட வெற்றி பெறாமல் உள்ளது என்றனர். 

Story image

மீண்டும் கும்மிடிப்பூண்டி தொகுதியை அதிமுகவிற்கே ஒதுக்கி அதிமுகவை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அப்போது முழக்கமிட்டனர்.

Story image

அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.