ஊத்துக்கோட்டை அருகே 3-வது மனைவியாக மகள் காதல் திருமணம்: வேதனையில் தாய், தந்தை தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே மகள் 3வது மனைவியாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.


ஊத்துக்கோட்டை அருகே மகள் 3வது மனைவியாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான தாமரைச்செல்வன்(60) - சரளா (55). இவர்களின் ஒரே மகளான அர்ச்சனா பல் மருத்துவர். மருத்துவரான அர்ச்சனா அக்கரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கணபதி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு அவர்களை பிரிந்து தற்போது 3வதாக அர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். மருத்துவராக்கி அழகு பார்த்த ஒரே மகள் அர்ச்சனா 3வது மனைவியாக ஒருவருக்கு திருமணமானதால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் தாமரைச்செல்வன் வயலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது தாய் சரளா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை கண்ட தந்தையும் பூச்சி மருந்து குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இதனைக் கண்டு ஊத்துக்கோட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்தள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் 3வது மனைவியாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...