ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறப்பு

பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், சுற்றுப்புற கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறப்பு
Updated On :11 அக்டோபர் 2021, 11:23 am

DIN

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் மழை நீர் வரத்து காரணமாக நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால், திங்கள்கிழமை மேலும் 1000 கன அடி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டதை தொடர்ந்து உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடி வெளியேற்றுவதால் கொசஸ்தலை ஆறு வழித்தடத்தில் உள்ள 29 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளதோடு 35 அடி உயரமும், 3231 மில்லியன் கன அடி நீர் சேமிக்கவும் முடியும். தற்போதைய நிலையில் பூண்டி ஏரிக்கான வரத்து கால்வாய், ஆந்திராவில் மழை பெய்து வருவதால் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்த்து 1600 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதனால், ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், வெள்ள நீர் வரத்தான 1000 கன அடி நீரை வெளியேற்ற வேண்டியுள்ளது. எனவே அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதல் படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 3,13 ஆகிய மதகுகள் வழியாக 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே திங்கள்கிழமை நிலவரப்படி பூண்டி நீர் வரத்துக் கால்வாய் மற்றும் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மட்டும் 1900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 34.05 அடி உயரமும், 2839 மில்லியன் கன அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் அணைக்கு வரும் நீர் வரத்தால் முழு கொள்ளளவ எட்டும் எதிர்பார்ப்பதால், திங்கள்கிழமை 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக விநாடிக்கு மேலும் 1000 கன அடி நீர் வீதம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டு, 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து அணையின் நிலவரத்தை கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொசஸ்தலை ஆற்றி வழித்தடத்தில் உள்ள 29 கிராமங்களைச் சேர்ந்தோர், தாழ்வான பகுதிகளில் வசித்து வருவோருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் ஆட்சியரால் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.