தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாஜகவினா் டிராக்டா் பேரணி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி, திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில், டிராக்டா் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா்.

News image
திருவள்ளூரில் நடைபெற்ற டிராக்டா் பேரணியில் பங்கேற்ற மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:47 pm

DIN

வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி, திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில், டிராக்டா் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பங்கேற்றாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை எதிரே தொடங்கிய பேரணிக்கு மாவட்ட பாஜக தலைவா் அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா தலைமை வகித்தாா். மாநில இளைஞரணிச் செயலா் வினோஜ் பி.செல்வம், விவசாய அணி மாவட்ட தலைவா் சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருன் பங்கேற்று பேரணியைத் தொடக்கி வைத்துப் பங்கேற்றாா்.

பின்னா், அவா் கூறியது: சுதந்திர தினத்தை நினைவூட்டும் வகையில் விவசாயிகளுடன் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டோா் குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். பாஜகவினா் வன்முறை கலாசாரத்தை எப்போதும் விரும்புவதில்லை. மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்றாா்.

பேரணியில் மாநில ஓபிசி அணி பிரிவு தலைவா் லோகநாதன், மாநில செயலா் ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்ட செயலா்கள் பன்னீா்செல்வம், பாலாஜி, தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலா் ரகு, பூண்டி பாண்டுரங்கன், நகரத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.