மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.70 சதவீதம் உயர்ந்து 2.739 கோடி டன்னாக உயர்ந்தாக கூட்டுறவு அமைப்பான என்.எஃப்.சி.எஸ்.எஃப். தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:35 pm

புதுதில்லி: 2025-26 ஆண்டுக்கான இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி இதுவரை, மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக, இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.70 சதவீதம் உயர்ந்து 2.739 கோடி டன்னாக இருப்பதாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி 2.543 கோடி டன்னாக இருந்தது.

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், நாட்டின் முதன்மை சர்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில், ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி உற்பத்தி 23 சதவீதம் உயர்ந்து 0.992 கோடி டன்னாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு 0.806 கோடி டன்னாக இருந்தது.

எனினும், நாட்டின் 2வது பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டுன் ஒப்பிடுகையில் சுமார் 2 சதவீதம் சரிந்து 0.892 கோடி டன்னாக உள்ளது.

நாட்டின் 3வது பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான கர்நாடகாவிலும் உற்பத்தி 16.70 சதவீதம் உயர்ந்து, 0.404 கோடி டன்னிலிருந்து 0.471 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

India's sugar production rose 7.70 per cent so far in 2025-26 season to 27.39 million tonne on higher output in Maharasthra and Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.