சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரிப்பு!

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

News image

sugar

Updated On :2 மார்ச் 2026, 10:08 pm IST

புதுதில்லி: இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

அக்டோபரில் தொடங்கி, நடப்பு சந்தைப்படுத்தல் பருவத்தில், பிப்ரவரி வரையான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

சக்கரை உற்பத்தி மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவிலிருந்து, கடந்த ஆண்டை விட 12.43 சதவீதம் அதிகம் என்று தொழில்துறை அமைப்பான இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 220 லட்சம் டன்னாக இருந்தது.

மகாராஷ்டிரத்தில் சக்கரை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆண்டில், பிப்ரவரி வரை இது 95.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதுவே 75 லட்சம் டன்னாக இருந்ததாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

நாட்டின் 2வது பெரிய உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சக்கரை உற்பத்தி 73 லட்சம் டன்னிலிருந்து 74.80 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் 3வது பெரிய உற்பத்தி மாநிலமான கர்நாடகாவில் சக்கரை உற்பத்தியானது 38.2 லட்சம் டன்னிலிருந்து 44.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 330 ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மொத்தம் 305 தொழிற்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன.

ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரையிலான சிறப்பு பருவத்தில் தெற்கு கர்நாடகாவில் உள்ள சில ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில், பிப்ரவரி 15ஆம் தேதி நிலவரப்படி நிலுவைத் தொகை ரூ.4,601 கோடியாக இருந்தது, கடந்த ஆண்டு இது ரூ.2,744 கோடியை விட இது அதிகமாகும்.

இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நிதியாண்டிற்கான மொத்த சர்க்கரை உற்பத்தியை 324 லட்சம் டன்னாக நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தியான 296.2 லட்சம் டன்னை விட இது அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.