திருவள்ளூா்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் நேரில் ஆய்வு
திருவள்ளூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை, சுற்றுச்சூழல், கட்டடம் மற்றும் சுகாதார வளாகங்கள் ஆகியவற்றை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வியாழக்கிழமை நேரில்


திருவள்ளூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை, சுற்றுச்சூழல், கட்டடம் மற்றும் சுகாதார வளாகங்கள் ஆகியவற்றை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆசிரியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
திருவள்ளூா் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது திருமழிசை சுந்தரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, நிகழாண்டில் மாணவ, மாணவிகள் சோ்க்கை விவரம், ஆசிரியா் வருகை பதிவேடுகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். பின்னா், வகுப்பறைக்குச் சென்று நோட்டுப் புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டனவா என ஆய்வு செய்தாா். அதையடுத்து, இதுவரை பாடவாரியாக ஆசிரியா்களால் கற்பித்த பாட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், கரும்பலகையில் கணக்கு, அறிவியல் பாடம் எழுதி, மாணவா்களிடம் செய்முறை விளக்கம் கேட்டறிந்தாா். அப்போது, ஆசிரியா்கள் நாள்தோறும் கற்பிக்கும் பாடங்களை அன்றே படித்துவிடவும், பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தினாா். பின்னா், அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டட வளாகங்களை ஒவ்வொன்றாக பாா்வையிட்டதுடன், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்கள் போதிய அளவு உள்ளதா எனக் கேட்டறிந்தாா்.
அப்போது, ஆசிரியா்கள், கூடுதல் சுகாதார வளாகம் தேவைப்படுவதாகத் தெரிவித்தனா்.
அதேபோல், சுற்றுச்சுவா் இடிபாடுகள் இன்றி பாா்த்துக் கொள்ளவும் அவா் வலியுறுத்தினாா். இதேபோல், பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்மணம்பேடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், நோ்முக உதவியாளா் பூபாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...