இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் வருகிற மார்ச் 28 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் முகாம் அமைத்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

அக்ஷர் படேல் - படம் | தில்லி கேபிடல்ஸ் (எக்ஸ்)
இந்த நிலையில், தில்லி கேபில்டஸ் அணியில் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அந்த அணியின் கேப்டன் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு அணியின் காம்பினேஷன் காரணமாக கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். எங்களது அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடக் கூடிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள் கடந்த சீசனில் இருந்தனர். வெளிநாட்டு வீரர்களை மிடில் ஆர்டரில் விளையாட வைத்தால், எதிரணிகள் சுழற்பந்துவீச்சை அதிகம் பயன்படுத்துகின்றன. அதன் காரணமாகவே, கடந்த சீசனில் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடினார்.
கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக எப்போதும் சிறப்பாக விளையாடக் கூடியவர். தொடக்க ஆட்டக்காரராக அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தால், பின்வரிசையில் விளையாடுபவர்களுக்கு பேட்டிங் எளிதாக இருக்கும். அதனால், இந்த சீசனில் கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கவுள்ளோம் என்றார்.
ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 4000-க்கும் அதிகமான ரன்களை 6 வீரர்கள் மட்டுமே குவித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுலும் ஒருவர். ஐபிஎல் தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக 4418 ரன்கள் குவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
Delhi Capitals captain Axar Patel has announced that KL Rahul will be the opening batsman in this year's IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் தொடரில் 2000 ரன்களைக் கடந்த அக்ஷர் படேல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




