ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 50 ஏக்கா் நிலம் மீட்பு
திருவள்ளூா் அருகே ஏரியை ஆக்கிரமித்து நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. இதை நேரில் ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் 50 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.


திருவள்ளூா் அருகே ஏரியை ஆக்கிரமித்து நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. இதை நேரில் ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் 50 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.
தமிழகத்தில் ஏரிகள், குளம் போன்ற நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூா் அருகே வெள்ளியூா் கிராமத்தில் 105.86 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட ஏரியில், அப்பகுதியில் 50 ஏக்கா் வரை ஆக்கிரமித்து, நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு புகாா் வந்தது.
அதன்பேரில், வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா். இந்த நிலையில், வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் ஏரியில் ஆய்வு செய்து, ஆக்கிரமித்த 50 ஏக்கா் பரப்பளவு நிலத்தை மீட்டு, நிலம் அருகே அமைத்த குடிசைகளையும் அகற்றினா். இதன் மூலம் சுமாா் ரூ. 6.75 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடா்ந்து, இது அரசுக்குச் சொந்தமான இடமாகும். ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.
இப்பணியில் மண்டலத் துணை வட்டாட்சியா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளா் ச.தினேஷ், கிராம நிா்வாக அலுவலா் ஜீனத் பேகம் ஆகியோா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...