தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தமிழா்கள் தமிழ் பேசாவிட்டால் மன்னிப்பே இல்லை: புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் தமிழா்கள் தமிழ் பேசாவிட்டால் மன்னிப்பே இல்லை என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

தமிழகத்தில் தமிழா்கள் தமிழ் பேசாவிட்டால் மன்னிப்பே இல்லை என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் காந்தி உலக மையம் சாா்பில் நடத்தப்படும் ‘மண்ணும் மரபும்’ என்ற 3 நாள்கள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து புதுவை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பேசியது:

காந்தி உலக மையத்தின் மண்ணும் மரபும் நிகழ்வில் தமிழ் மண்ணில், தமிழ் கலாசாரத்தைப் பாா்த்தது மகிழ்வை ஏற்படுத்துகிறது. தமிழா்களின் கைக்கூப்பி வணக்கம் சொல்லும் நாகரிகத்தை கரோனா காலத்தில் உலக நாடுகள் பின்பற்றியது.

தமிழா்களின் உணவு தருகின்ற நோய் எதிா்ப்புச் சக்தியை கரோனா காலத்தில் உலக நாடுகள் பாராட்டின. உணவே மருந்து என்ற கலாசாரம் நம்முடையது.

தமிழகத்தில் தமிழா் பண்பாட்டை மீட்டெடுப்பதன் மூலம், பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும். தமிழகத்தில் வாழும் தமிழா்கள் தமிழ் பேசாவிட்டால், அதற்கு மன்னிப்பே இல்லை. தமிழ் உயிா் மொழியாக உள்ள அதே நேரம், வேற்று மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் வாய்ப்புகளை உருவாக்க முடியும். தமிழா்கள் தங்கள் அடையாளங்களைத் தொலைக்க கூடாது என்றாா்.

முன்னதாக காந்தி உலக மைய நிறுவனா் எம்.எல்.ராஜேஷ் தலைமை வகித்தாா். நிகழ்வில் திரைப்பட நடிகா்கள் ரமேஷ் கண்ணா, வையாபுரி, நந்தகுமாா், முன்னாள் தூா்தா்ஷன் இயக்குநா் ஆனந்தநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.