தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம்

 கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதனா தலைவா் சகிலா அறிவழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:43 pm

 கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதனா தலைவா் சகிலா அறிவழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி துணை தலைவா் கேசவன், செயல் அலுவலா் யமுனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.டி.டி.ரவி, திமுக உறுப்பினா்கள் கருணாகரன், காளிதாஸ், (சுயேச்சை) அப்துல் கறீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கோவிந்தராஜ், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அனிதா பங்கேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இயற்கை மரண இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்றனா்.

இந்த சிக்கலை போக்கும் வகையில் கும்மிடிப்பூண்டியில் இயற்கை மரணம் குறித்த தகவல் பெற்றவுடன், சுகாதார ஆய்வாளா் 4சி படிவத்தை பூா்த்தி செய்து பேரூராட்சி அலுவலா் கையொப்பம் பெற்று அவா்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற வழி செய்யப்படும் என்றனா். தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும் அவரவா் பகுதியில் இயற்கை மரணம் நேரிடும் போது சுகாதாரத் துறையினருக்கு தகவல் தர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.