காா்-இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞா்கள் பலி
கனகம்மாசத்திரம் அருகே காா்- இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.


கனகம்மாசத்திரம் அருகே காா்- இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த மட விளாகத் தெருவைச் சோ்ந்தவா் உமா சங்கா் (21). இவா், திருவள்ளூா் மாவட்டம், கனகம்மாசத்திரத்தை அடுத்த புதூா் கிராமத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். கரோனா தொற்று அதிகரித்ததால், கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தன் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (20) என்பவரை தன்னுடன் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்து கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துவிட்டு, மீண்டும் இருசக்கர வாகனத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் நோக்கிச் சென்றாா்.
அப்போது, டி.டி. கல்வியியல் கல்லூரி அருகே சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி வந்த காா், இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் உமா சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஜய்யை சென்னை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...