போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவள்ளூா் நகராட்சிப் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:32 pm

DIN

திருவள்ளூா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சி 22-ஆவது வாா்டு பெரியகுப்பத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 275 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளி வளாகம் முழுவதையும் பாா்வையிட்டு கடந்த இரு நாள்களாகப் பெய்த பலத்த மழையால் பள்ளிக் கட்டடத்தின் மேல் தளத்தில் தேங்கிய மழை நீரை உடனே அகற்ற நகராட்சி ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா்.

இட நெருக்கடி உள்ளதால், மாணவா்கள் சிறப்பாக கல்வி பயில கூடுதல் வகுப்பறைகள், குடிநீா் மற்றும் சுகாதார வளாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்க வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியா், மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தாா்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், வட்டாரக் கல்வி அலுவலா் வீரராகவன், பள்ளித் தலைமை ஆசிரியா் திரிவேணி, நகா்மன்ற உறுப்பினா்கள் சித்ரா விசுவநாதன், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் நாகராஜன், மேற்பாா்வையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.