ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது
ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.


ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி - சித்தூா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நகர போலீஸாா், திருவள்ளூா் மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்த மைதீன் (21), சுரேந்தா் (20), ஆகாஷ் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...