ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கும்மிடிப்பூண்டி: 10, +2 மாணவர்களுக்கு தேர்வு கையேடு வழங்கிய பிர்லா கார்பன் நிறுவனம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன்  நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில்

News image
Updated On :28 மார்ச் 2022, 6:25 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிர்லா கார்பன்  நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் 832 மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயிற்சி அளித்ததோடு தேர்வு கையேடும் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளுக்கான ஒரு நாள் தேர்வு வழிகாட்டுதல் வகுப்பும், மாணவர்களுக்கு குறைந்த பட்ச தேர்வுக்கான கற்றல் கையேடுகள் வழங்கும் நிகழ்வு பிர்லா கார்பன் நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மிர் அலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வள்ளிமுத்து, புகழேந்தி முன்னிலை வகித்தனர். 

நிகழ்வில் பிர்லா கார்பன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் பி.எல்.தாஸ் பங்கேற்று 10,12 ஆம் வகுப்பை சேர்ந்த 400 மாணவர்களுக்கு தேர்வு கையேட்டினை வழங்கினார். தொடர்ந்து பாடங்கள் வாரியாக தேர்வை சிறப்பாக எழுதுவது குறித்து ஆசிரியர் குழுவினர் பயிற்சி அளித்தனர்.

புது கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, எஸ்.ஆர்.கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சியில் இருந்து பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பொதுத் தேர்வு எழுதும் 832 மாணவர்களுக்கு தேர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.

பிர்லா கார்பன் நிறுவனத்தின் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த சிறப்பு பயிற்சியும், தேர்வு கையேடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  விழா முடிவில்  பிர்லா கார்பன் நிறுவன மனித வளத் துறை அலுவலர் பெர்ணாண்டஸ் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.