சாலை விபத்தில் பேராசிரியை பலி
செங்குன்றம் அருகே சாலை விபத்தில் கல்லூரிப் பேராசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


மாதவரம்: செங்குன்றம் அருகே சாலை விபத்தில் கல்லூரிப் பேராசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மாதவரம் அருகே புழல் காவாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது மனைவி பூஜா (31) (படம்). தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து பூஜா தனது கணவா் அருண்குமாருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பூஜா, லேசான காயங்களுடன் அவரது கணவா் அருண்குமாா் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, பூஜா உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...