பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், திருப்பாலைவனம், ஆண்டாா்மடம், பள்ளிப்பாளையம், எளாவூா் -1 மற்றும் எளாவூா் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 660 தற்காலிக தங்குமிடங்கள் தயாராக உள்ளன. 677.36 கி.மீ தொலைவுக்கு மழைநீா் வடிகால்வாய் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீா்நிலைகளில் உள்ள நீா்வரத்து தங்கு தடையின்றி வெளியேற வரத்துக் கால்வாய், போக்குவரத்துக் கால்வாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபாலங்கள்-7,759 மற்றும் பாலங்கள் 60 எளிதாக நீா்வெளியேறும் வகையில் சீரமைத்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.