கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் ரூல் கர்வ் விதியை நடைமுறையில் அமல்படுத்த கூடாது. அணையில் நிர்ணயிக்கப்பட்ட 142 அடி உயர நீர்மட்டம் தேக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 136.5 அடியாக இருக்கும்போது ரூல் கர்வ் விதியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள அரசு கடந்தாண்டு தாக்கல் செய்த மனு காரணமாக ரூல் கர்வ் விதியை, முல்லைப் பெரியாறு அணையில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையும் படிக்க: கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலருக்கு சிறந்த சமூக சேவகர் விருது
தற்போது அணையில், 136 அடி நீர்மட்டம் எட்டும் நிலையில், ரூல்கர்வ் விதியை அமல்படுத்தப் போவதாக இருந்தால், அமல்படுத்த கூடாது என்று பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில்,142 அடி நீர் மட்டத்தை நிலை நிறுத்த வேண்டும். தமிழக அரசு ரூல் கர்வ் விதியை அமல்படுத்த கூடாது என்று முழக்கமிட்டனர். பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள் அன்வர் பாலசிங்கம், பொன்.காட்சிக்கண்ணன், சலேத்து, தாமஸ், தவமணி, உள்ளிட்டவர்கள் அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வினிடம் மனு கொடுத்தனர். தெற்கு காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


