காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்: கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பள்ளியில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கம் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் தனியாா் துறைமுகம் அமைந்துள்ளது.

இந்த துறைமுகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துத் கேட்பு கூட்டம் காட்டுப்பள்ளி அருகே உள்ள காலாஞ்சியில் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

துறைமுக விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த பழவேற்காடு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற இருந்த கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com