திருவள்ளூரில் திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி,
திருவள்ளூரில் திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணியினர் திரளாக பங்கேற்றனர்.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக “நீட் தேர்வு உள்ளது. இத்தேர்வு   மாணவர்களை மட்டுமின்றி, பெற்றோர்களையும் மரணக்குழியில் தள்ளும் “நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜக அரசையும், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் என திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் சா.மு.நாசர்(மத்திய மாவட்டம்), டி.ஜெ. கோவிந்தராஜன்(கிழக்கு), திருத்தணி எஸ். சந்திரன்(மேற்கு) ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.எச்.சேகர், மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.முரளி சேனா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆ.சாம் ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர். 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், வழக்குரைஞர் பிரிவு அமைப்பாளர் பி.கே.நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் டாக்டர் வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாலன், முன்னாள் நகர் மன்ற பொன்.பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்கத்துல்லாகான், ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி மோ.ரமேஷ், கிறிஸ்டி, ஒன்றிய துணைச்செயலாளர் சித்ராரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் விஜயகுமாரி சரவணன், சிவசங்கரி, சரஸ்வதி சந்திரசேகரன், மாவட்ட துணை அமைப்பாளர் மோதிலால், வார்டு உறுப்பினர்கள் அருணா ஜெயகிருஷ்ணா, டி.கே.பாபு, எல்லாபுரம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com