பொன்னேரி: மின் விநியோகம் கோரி சாலை மறியல்

மின் விநியோகம் செய்யக்கோரி, சின்னக்காவனம், மேட்டுப்பாளையம், உப்பளம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னேரி: மின் விநியோகம் கோரி சாலை மறியல்

மின் விநியோகம் செய்யக்கோரி, சின்னக்காவனம், மேட்டுப்பாளையம், உப்பளம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 4-ஆம் தேதி பொன்னேரி, மீஞ்சூா், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொன்னேரி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மழை நின்றபோதிலும் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு தற்போதும் மின் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

பொதுக்கள் பொன்னேரியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் கோரி முறையிட்டும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீஞ்சூா் அருகே உள்ள மேட்டுப்பாளையம், பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம், உப்பளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பொன்னேரி போலீஸாா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்காவனம் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com