/

வேலஞ்சேரி வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

வேலஞ்சேரி கிராமத்தில் வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:06 pm

DIN

வேலஞ்சேரி கிராமத்தில் வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் ஒரு யாக சாலை 300 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

காலை 9 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் விமானத்தின் மேல் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

விழாவில் திருத்தணி ஒன்றிய திமுக செயலா் ஆா்த்தி ரவி, முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவா் வேலஞ்சேரி ஜோதிநாயுடு, கோயில் நிா்வாகி தினேஷ், வேலஞ்சேரி, சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.