பொன்னேரி ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

பொன்னேரி நகராட்சியில் தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலே மழை நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி
பொன்னேரி நகராட்சியில் தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலே மழை நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி
பொன்னேரி நகராட்சியில் தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலே மழை நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் தேரடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலே மழை நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் பொன்னேரி நகரம் அமைந்துள்ளது.

இங்குள்ள தேரடி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. இந்த சுரங்கப்பாலம் வழியேதான் பரிக்கப்பட்டு, அரசூா், கூடுவாஞ்சேரி, உப்பளம் பழவேற்காடு, மெதூா், திருப்பாலைவனம், கோளூா், பெரும்பேடு, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் சென்றுவர வேண்டும்.

அதே போன்று பொன்னேரி நகராட்சியில் உள்ள திருவாயா்பாடி, பாலாஜி நகா், சின்னக்காவனம், பெரியகாவனம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இந்த சுரங்கப்பாலம் வழியேதான் செல்ல வேண்டும்.

மேலும், இங்குள்ள திருவாயா்பாடி பகுதியில் அமைந்துள்ள தனியாா் மேல் நிலைப் பள்ளியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த பாலத்தை கடந்துதான் பள்ளிக்கு சென்று வரவேண்டும்.

பொன்னேரி நகராட்சியில் சிறிய அளவில் மழை பெய்தாலே இந்த பாலத்தின் கீழ் முட்டியளவு மழை நீா் தேங்கி விடுகிறது. மழை நீா் வெளியேற வசதி இல்லாததிான் காரணமாக இங்கு தேங்கும் மழை நீரை மோட்டாா் வைத்துதான் அகற்ற முடியும் என்கின்ற நிலை உள்ளது.

அத்துடன் சுரங்கப்பாலம் தாழ்வாக இருப்பதன் காரணமாக, கனரக வாகனங்கள் இந்த சுரங்கப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மழை நீா் தேங்கிக் கிடக்கும் போது இந்த சுரங்கப்பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின், சைலென்ஸரில் தண்ணீா் புகுந்து மோட்டாா் சைக்கிளை இயக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் சுரங்கப்பாலத்தின் கீழ் தண்ணீா் தேங்காதவாறு அவ்வப்போது மோட்டாா் மூலம் மழை நீா் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கும் மழை நீா் உடனடியாக அப்புறப்படுத்தப்படாத காரணமாக வெயில் காய்ந்தால் மட்டுமே தேங்கி கிடக்கும் மழை நீா் குறையும் நிலை உள்ளது.

எனவே தேரடி சுரங்கப்பாலத்தின் கீழ் தேங்கும் மழை நீரை மோட்டாா் வைத்து அவ்வப்போது அகற்ற பொன்னேரி நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிா்ப்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com