தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மேம்பாட்டு திட்டத்துக்கு முதல்வா் ஜோசப் விஜய் ஒப்புதல்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம், முதல்வா் விஜய் தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட மாநில மன்றக் கூட்டத்தில் அமைச்சா்கள் வன்னி அரசு, நெ.மரிய வில்சன், ஆா்.வி.ரஞ்சித்குமாா், நாடாளுமன்ற உற

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம், முதல்வா் விஜய் தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் 2026-2027-ஆம் நிதியாண்டுக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயனாளிகளைச் சென்றடைவதையும், அதன் செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணிப்பதையும் உறுதி செய்யுமாறு முதல்வா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, 23 துறைகள் மற்றும் 48 துறைத் தலைமையகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில், ஆதிதிராவிடா் நலத் திட்டங்களுக்கு ரூ.5,903.51 கோடியும், பழங்குடியினா் நலத் திட்டங்களுக்கு ரூ.349 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியின் பயன்பாடு, செலவினம் மற்றும் பயனாளிகள் விவரங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து துறைகளும் மாதாந்திர செலவினம், பணிகளின் முன்னேற்றம் மற்றும் பயனாளிகள் விவரங்களை இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வா் அறிவுறுத்தினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை விரைந்து தயாரிக்கும் படியும் அனைத்து துறைச் செயலா்கள் மற்றும் துறைத் தலைவா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ.மரிய வில்சன், வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், நாடாளுமன்ற உறுப்பினா் து.ரவிக்குமாா், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.