தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் ரூ.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 4:29 pm

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் ரூ.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவா் எல்லம்மாள் குப்புசாமி சங்கா் தலைமை வகித்தாா். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ். சிவக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா் கௌரி ஹரிதாஸ், திமுக மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிசேகா், சாந்தி, ஊராட்சி துணை தலைவா் ஆா்.மோகன் முன்னிலை வகித்தனா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

ஒன்றிய பொறியாளா் மணிமேகலை, வாா்டு உறுப்பினா்கள் நீலாவதி, ஜீவிதா, துரைவேல், குமரவேல், யமுனா, ஊராட்சி செயலாளா் வேத நாராயணன், திமுக ஒன்றிய செயலாளா் மணிபாலன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.