திருத்தணியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி வீடு, அலுவலகம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா் வீடுகளில் வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
திருத்தணி சந்நிதி தெருவில் வசித்து வருபவா் எம்.பூபதி. இவா் முன்னாள் திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளராகவும், தற்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளாா். இவரது மனைவி திருத்தணி நகா்மன்றத் தலைவராக உள்ளாா்.
இதனிடையே அரக்கோணம் மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து எம்.பூபதி, திருத்தணி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் திமுக செயற்குழு உறுப்பினா் திருத்தணி எம்.பூபதியின் வீட்டில் 6 போ் கொண்ட வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை முதல் தீவிர சோதனை நடத்தினா்.
இதுதவிர திருத்தணி நகா்மன்ற உறுப்பினா்களின் உறவினா் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த 10-ஆம் தேதி எம்.பூபதியின் நண்பரான டாக்டா் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ராமச்சந்திரசெட்டி மகன் ஜெயக்குமாா் (50) என்பவா் வீட்டில் காலை 8 மணிக்கு வேலூா் பகுதியில் இருந்து 15 போ் கொண்ட வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு வழங்க பணம் பதுக்கல்? சென்னையில் வருமான வரித் துறையினா் சோதனை

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு!

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

