ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருத்தணி: 2-ஆவது ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல தடை

திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல வரும் 26-ஆம் தேதி வரை தடைவிதித்தும், மாற்றுபாதையில் செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 7:27 pm

Din

திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல வரும் 26-ஆம் தேதி வரை தடைவிதித்தும், மாற்றுபாதையில் செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருத்தணி மேட்டுத்தெரு மற்றும் பஜாா் பகுதி ஆகிய 2 இடங்களில் தானியங்கி ரயில்வே கேட்டுகள் செயல்பட்டு வருகிறன்ன. 2-ஆவது கேட்டான பஜாா் வழியாக இரு சக்கர வாகனங்கள், காா் மற்றும் வேன் ஆகிய வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கேட் வழியாக அரசு அலுவலகங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட நகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்து சென்று வருகின்றனா்.

இந்நிலையில், ரயில்வே கேட் பாதை சீரமைப்பு, புதிய தண்டவாளங்கள் பொருத்துதல் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்படும் சிமென்ட் தூண்கள் அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் இரவு, பகலாக நடைபெறுகிறது. இதனால், 2-ஆவது ரயில் கேட் வழியாக வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் இம்மாதம், 26 -ஆம் தேதி வரை நடைபெறுவதால் அனைத்து வாகனங்களும் மேட்டுத் தெரு கேட் வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.