அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜன. 5-இல் மேலாண்மைக் குழு கூட்டம்
திருவள்ளூா்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் வரும் 5-ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளிக் கல்வித் துறையால் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அவா்களுக்கான குழுக் கூட்டத்தில் முடிவு செய்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் 5-ஆம் தேதி மாலை 3 மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் பெற்றோா்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அத்துடன், அந்தக் கூட்டத்தில் கடந்த கொண்டு வந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து விவாதம் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து பள்ளி வகுப்பறைகளில் என்னென்ன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அங்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா, இல்லாதவை குறித்தும் கூட்டத்தில் தெரிவித்து அதை நிறைவேற்ற தீா்மானம் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தொடா்பான தகவலை உடனே அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
